திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை தடைசெய்ய வேண்டும், கடன்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அரசு மின் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடைவிதிக்க வேண்டும்' - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - Democratic Youth Federation of India protest
திருச்சி: பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடைவிதிக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரண்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்யக் கோரி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் முகக்கவசங்களை அணிந்து கலந்துகொண்டனர்.