இந்தச் சங்கத்தில் 3000-க்கும் அதிகமான தங்கும் விடுதி உரிமையாளர்கள் உள்ளனர். ஐந்து நட்சத்திர உணவக நிர்வாகங்களும் இந்த முடிவை எடுக்குமாறு தங்கள் சங்கம் வலியுறுத்தும் எனச் சங்கத்தின் தலைவர் சந்தீப் கண்டேல்வால் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சீனர்களுக்குத் தங்க இடம் கிடையாது! - சீன பொருட்களுக்கு தடை
டெல்லி: சீன ராணுவம் தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் சீன நாட்டினருக்கு அறை வழங்கப்படாது என உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது.
அதேபோன்று நாட்டின் இதர நகரங்களில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சீனர்களுக்கு அறை கொடுக்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகளில் தங்களது சங்கம் ஈடுபடும் எனவும் அவர் கூறினார்.
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து நாட்டில் சீன பொருள்களுக்கு எதிராகப் பரவலான முழக்கங்கள் எழத் தொடங்கியுள்ளன. இச்சூழலில் டெல்லி உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.