தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா தனிமைப்படுத்துதல் 14 நாளிலிருந்து 7 ஆக குறைப்பு! - புதுடெல்லி செய்திகள்

புதுடெல்லி: கரோனா தனிமைப்படுத்துதல் காலத்தை 14 நாள்களிலிருந்து 7 நாள்களாக டெல்லி அரசு குறைத்துள்ளது.

கரோனா அறிகுறியற்ற பயணிகளின் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் 14 லிருந்து 7 ஆக குறைப்பு - டெல்லி அரசு
கரோனா அறிகுறியற்ற பயணிகளின் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் 14 லிருந்து 7 ஆக குறைப்பு - டெல்லி அரசு

By

Published : Jun 4, 2020, 4:24 AM IST

தேசிய தலைநகருக்கு வரும் அனைத்து அறிகுறியற்ற பயணிகளுக்கும் 14 நாள்கள் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஏழு நாட்களாக குறைக்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,513 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி தலைமைச் செயலாளரும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (டி.டி.எம்.ஏ) நிர்வாகக் குழுவின் தலைவருமான விஜய் தேவ் கூறுகையில், “விமான நிலையம், ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறைகள் தினந்தோறும் பயணிகள் வருகைகளை வருவாய் துறை முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்றார்.

கடந்த வாரம், கர்நாடக அரசு மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்களைத் தவிர, மாநிலத்திற்கு வரும் அறிகுறியற்ற அனைத்து பயணிகளுக்கும் கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஏழு நாட்களாகக் குறைத்தது.

இதற்கிடையில், டெல்லி, நொய்டா, ஆக்ரா, லக்னோ, மீரட், வாரணாசி, சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 75 மோசமான கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நகரங்களில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு உத்தரகண்ட் அரசு புதன்கிழமை 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 21 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

தலைமைச் செயலாளர் உத்பால் குமார் சிங் பிறப்பித்த உத்தரவின்படி, "இந்த நகரங்களில் இருந்து வருபவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு நிறுவனத்தின் வசதியில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு, அவர்கள் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார் .

ABOUT THE AUTHOR

...view details