டெல்லி பாலஸ்வா பகுதியைச் சேர்ந்தவர் விரிந்தாவன். இவரது நண்பர் சஞ்சய். இவர், கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய ஆயுதப்படையில் (சிஆர்பிஎஃப்) பணிபுரிந்தார். சஞ்சய், மற்ற நண்பர்களுடன் இணைந்து விரிந்தாவன் பணம், சொத்து ஆவணங்களை கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்.
திருட்டு வழக்கில் ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் முன்னாள் காவலர் கைது! - திருட்டு வழக்கில் சிஆர்பிஎஃப் காவலர் கைது
டெல்லி: திமர்பூர் பகுதியில் நண்பனை ஆட்கள் வைத்து அடித்து அவரிடமிருந்த பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎஃப்) காவலர் கைது செய்யப்பட்டார்.
![திருட்டு வழக்கில் ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் முன்னாள் காவலர் கைது! Robbery](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:00:20:1604125820-9374296-delhi-2.jpg)
இதன்படி, சஞ்சய் விரிந்தாவனை இருசக்கர வாகனத்தில் முகர்ஜி நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு வந்த சஞ்சயின் மற்ற நண்பர்கள், சஞ்சையை அடிப்பதுபோல் நடித்தனர். பின்னர், பணம், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இதைத் தடுக்க முயன்ற விரிந்தாவனின் காலில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விரிந்தாவனின் சொத்து ஆவணங்களை கொள்ளையடிப்பது தொடர்பாக, சஞ்சய், அவரது நண்பர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் வாயிலாக திட்டம் தீட்டியது தெரியவந்தது.