தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

டெல்லியில் ஒரே நாளில் 3,630 பேருக்கு கரோனா! - டெல்லி கரோனா எண்ணிக்கை

டெல்லி: ஒரே நாளில் அதிகபட்சமாக 3,630 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் மொத்த எண்ணிக்கை 56ஆயிரமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

டெல்லியில் ஒரே நாளில் 3,630 பேருக்கு கரோனா
3000 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Jun 21, 2020, 5:35 PM IST

டெல்லியில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 630 பேருக்கு, கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. டெல்லியில் அதிகப்படியாக கரோனா தொற்று பரவியிருப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜூன் 19ஆம் தேதி அதிகபட்சமாக 3 ஆயிரத்து 137 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனால், கரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 112 ஆக உயர்ந்துள்ளது. இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 746 ஆக உள்ளது.

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஒவ்வொரு நோயாளியும் ஐந்து நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட்ட ஒரு நாள் கழித்து, ஆம் ஆத்மி அரசாங்கம் கடுமையான எதிர்ப்பைக் காட்டியது. இதையொட்டி, இந்த முடிவு ரத்து செய்யப்பட்டது.

டெல்லி அரசாங்கத்துக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையிலான இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டது. இப்போது நேர்மறை சோதனை செய்யும் அனைத்து நபர்களும், முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்களா என்பதை அறிய கரோனா பராமரிப்பு மையங்களில் பரிசோதிக்கப்படுவார்கள். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்த போதுமான வசதிகள் உள்ளதா என்றும் சோதிக்கப்படயிருக்கிறது.

சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நாளும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். ஜூன் 30ஆம் தேதிக்குள் டெல்லியில் ஒரு லட்சம் நோயாளிகளும், ஜூலை 15ஆம் தேதிக்குள் மாநிலத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் நோயாளிகளும், ஜூலை 31ஆம் தேதிக்குள் கிட்டத்தட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கின்றனர்

ABOUT THE AUTHOR

...view details