தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கெஜ்ரிவாலுக்கு பளார்...! ஆம் ஆத்மி கட்சியினர் அதிர்ச்சி - delhi

டெல்லி: மேற்கு டெல்லி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அடையாளம் தெரியாத நபர் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கும் நபர்

By

Published : May 4, 2019, 7:21 PM IST

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரை ஆதரித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கு டெல்லி பகுதியில் உள்ள மோதி நகரில் திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது வாகனத்தின் மீது ஏறிய அடையாளம் தெரியாத நபர் திடீரென கெஜ்ரிவால் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைந்தார். இதனால், அவர் நிலைகுலைந்து கீழே விழும் சூழலில் அருகில் இருந்த கட்சியினர் அவரை தாங்கிப் பிடித்தனர்.

இதனிடையே, கெஜ்ரிவாலை அறைந்த நபருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, கெஜ்ரிவாலை அறைந்த காட்சி வெளியாகி அக்கட்சி தொண்டர்களிடையேயும், மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2015ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புரையின்போது ஆட்டோ ஒட்டுநர் கெஜ்ரிவாலை அறைந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details