திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அரங்கல் துருகம் காப்புக்காட்டுப் பகுதியில் இருந்து இன்று(ஜூன் 21) காலை வழித்தவறி இரண்டு வயது புள்ளிமான் ஒன்று அரங்கல் துருகம் ஊர்ப்பகுதியில் நுழைந்தது.
வழித்தவறி வந்த மானை கடித்துக் கொன்ற நாய்கள் - Forest deer
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியிலிருந்து வழித்தவறி ஊர் பகுதியில் நுழைந்த மானை நாய்கள் துரத்தி கடித்ததால் உயிரிழந்தது
Dogs that are bitten
இந்த மானைக் கண்ட அப்பகுதி நாய்கள் துரத்தி கடிக்க ஆரம்பித்துள்ளன. பின்னர் தப்பிக்க முடியாத அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவலளித்தனர்,
பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் இறந்த மான் மீட்கப்பட்டு உடற்கூறாய்விற்காக கரும்பூர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.