தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

CWC19: இந்தியா - பாக். ஆட்டத்தின் சிறப்புத் தொகுப்பு

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா 336 ரன்கள் குவிப்பு

By

Published : Jun 16, 2019, 8:06 PM IST

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ரசிகர்கள் ஆவலுடன் இருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மான்செஸ்ட்ரில் நடைபெற்று வருகிறது.

இந்தியா - பாக் போட்டியைக் காண குவிந்த இருநாட்டு ரசிகர்கள்

இருநாட்டு ரசிகர்களும் இப்போட்டியைக் காண மைதானத்துக்கு மிகுந்த ஆர்வத்துடன் குவிந்தனர்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது

இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் - ரோகித் ஷர்மா களமிறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 136 ரன்களை சேர்த்த கே.எல்.ராகுல் - ரோகித் ஷர்மா ஜோடி

இதையடுத்து, கே.எல்.ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 24ஆவது சத்ததை எட்டினார்.

24ஆவது சதம் அடித்த மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோகித் ஷர்மா

இதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் அதடுத்து இரண்டு சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

140 ரன்களுடன் ஆட்டமிழந்த ரோகித் ஷர்மா

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா 140 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், 14 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.

பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஆமிர்

அவரைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா, தோனி ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்தார் முகமது ஆமிர்.

பொறுப்புடன் ஆடிய கோலி


இதைத்தொடர்ந்து, பொறுப்புடன் ஆடிய கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 51ஆவது அரைசதத்தை எட்டினார்.

65 பந்துகளில் 7 பவுண்டரிகள் விளாசிய கோலி, முகமது ஆமிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனிடையே, அவர் 57 ரன்கள் எடுத்திருந்த போது, ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை குவித்தார்.

அரைசதம் விளாசிய கோலி

இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 11 ஆயிரம் ரன்களை குவித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். கோலி இச்சாதனையை தனது 222ஆவது இன்னிங்ஸில் எட்டியுள்ளார்.

இந்திய அணியில் ஜொலித்த மும்மூர்த்திகள்,கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா, கோலி

இறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது.

ஹர்திக் பாண்டியா, தோனி, கோலி ஆகியோரின் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் ஆமிர்

பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஆமிர் சிறப்பாக பந்துவீசினார். 10 ஓவர்களில் ஒரு மைடன், 47 ரன்கள் வழங்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ABOUT THE AUTHOR

...view details