உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், பிரிஸ்டோல் நகரில் நடைபெற்றுவரும் நான்காவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதின் நைப் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஆஸி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷேசாத், ஹஸரதுல்லாஹ் ஆகியோர் டக் அவுட் உடன் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து, முகமது நபி, ஹஷ்மதுல்லாஹ், ரஹ்மத் ஷா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், ஆஃப்கானிஸ்தான் அணி 20.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான தருணத்தில், ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் குல்பதின் நைப் - நஜிபுல்லாஹ் சட்ரான் ஆகியோர், ஆஸ்திரேலிய அணியின் மிரட்டலான பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. இவ்விரு வீரர்களும் ஆறாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் குல்பதின் நைப் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நஜிபுல்லாஹ் 51 ரன்களிலும், தவ்லத் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆஸி.யின் பந்துவீச்சை எதிர்கொண்ட குல்பதின் நைப், நஜிபுல்லாஹ் இருப்பினும், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஆல்ரவுண்டர் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு பயப்படாமல் அதிரடியாக ஆடினார். 11 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், ஆஃப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெட் கம்மின்ஸ், ஆடாம் சாம்பா ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர்.