தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஊரடங்கு மீறல்: ரூ.10 கோடியை நெருங்கும் அபராதம்! - Tamil Nadu Police

ஊரடங்கு மீறுதல் அபராதத் தொகை 10 கோடி ரூபாயை நெருங்குகிறது எனத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

Corona vehicle seized fine
Corona vehicle seized fine

By

Published : Jun 1, 2020, 2:00 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 69 நாள்களாக அமலில் இருந்துவருகிறது.

குறிப்பாக காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றுவரலாம் என அரசு உத்தரவிட்டது.

ஆனால், இதனை மீறி வெளியே சுற்றித் திரியும் பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 69 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை தடையை மீறிய குற்றத்திற்காக ஐந்து லட்சத்து 64 ஆயிரத்து 440 பேரை கைதுசெய்து பிணையில் விடுவித்தது.

மேலும் தடையை மீறி வாகனங்களில் சுற்றியதாக நான்கு லட்சத்து 38 ஆயிரத்து 720 வாகனங்களைப் போக்குவரத்துக் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.

இதுவரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக ஒன்பது கோடியே 31 லட்சத்து 78 ஆயிரத்து 224 ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details