மதுரையில் அறிவிக்கப்பட்டிருந்த தீவிர ஊரடங்கு நேற்று நள்ளிரவில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இன்று முதல் நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார்.
மதுரையில் ஊரடங்கு தளர்வு ! - Madurai Collector D.G Vinay Announcement
மதுரையில் அறிவிக்கப்பட்டிருந்த தீவிர ஊரடங்கில் இன்று முதல் நிபந்தனைகளுடன் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
![மதுரையில் ஊரடங்கு தளர்வு !](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:42:34:1594743154-tn-mdu-07-lockdown-condition-collector-script-7208110-14072020213410-1407f-1594742650-827.jpg)
Curfew relaxation in Madurai with conditions from tomorrow
இந்தத் தளர்வில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை அனைத்துவிதமான கடைகளும் திறந்திருக்கும். உணவகங்களில் 50 விழுக்காடு நபர்கள் மட்டுமே உணவருந்துவதற்கு அனுமதி. அதேபோன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பட்டப்பகலில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு!