தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் வரும் 31ஆம் தேதிவரை ஆறாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி! - கூலி தொழிலாளர்கள் வேலை
தென்காசி: மாவட்டத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்து முடக்கத்தால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
![பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி! பொதுபோக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:54:14:1593588254-tn-tki-02-curfew-bus-status-7204942-01072020115452-0107f-1593584692-902.jpg)
பொதுபோக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி!
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இந்த ஆறாம் கட்ட ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து சேவை இன்று முதல் 15ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிறு வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அரசு கருத்தில் கொண்டு மீண்டும் குறைந்த அளவில் மண்டலம் வாரியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.