தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கடலூரில் நேற்றுவரை கரோனா தொற்றால் 1721 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 45 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1766ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் இன்று 35 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 382ஆக அதிகரித்துள்ளது.
விருதாச்சலம் வட்டாட்சியர் உள்பட மூவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளி உள்ளிட்டவை பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், மேலும் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.