கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள சின்னப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு குடும்பத்துடன் படுத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறையில் இருந்த இரண்டு பீரோவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் இரண்டு லட்சம் பணம், வெள்ளி பெருள்களை திருடி சென்றனர். இதேபோல் பக்கத்து வீட்டில் உள்ள அவரது சித்தப்பா தேவேந்திரன் என்பவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம், ஒரு கிலோ வெள்ளி பெருட்களை திருடி சென்றுள்ளனர்.