தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - Nagai CPIM protest

நாகை : கரோனா ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய, மாநில அரசுகளிடம் நிவாரணம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Nagai CPIM protest

By

Published : Jun 16, 2020, 3:00 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் ஒன்றியங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் வட்டக் குழு உறுப்பினர் துரைக்கண்ணு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில், ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு 7,500 ரூபாயும், மாநில அரசு 5,000 ரூபாயும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், 100 நாள் வேலைத் திட்டத்தை, 200 நாள்காளாக உயர்த்தி, 600 ரூபாய் சம்பளம் வழங்கக் கோரியும், இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து புதிய கடன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :இ-பாஸ் இல்லாமல் நாகை வந்த தம்பதி!

ABOUT THE AUTHOR

...view details