உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை அடையும் நிலையில் அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் நாகையில் கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு! - கரோனா நிலவரம்
நாகப்பட்டினம் : கோவிட்-19 ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 202ஆக உயர்ந்துள்ளது. தளர்வளிக்கப்பட்ட பின்னர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்களால் கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக சுகாதார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது 135 நபர்களுக்கு சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 67 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.