உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கோவிட்-19 பாதிப்பால் இதுவரை 56 ஆயிரத்து 845 பேர் பாதிக்கப்பட்டும், 704 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கும் சிவப்பு குறியீட்டு பகுதியான சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். பிற மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்தாலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பரவல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நேற்று (ஜூன் 20) ஒரே நாளில் 1200க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக, 180 நபர்கள் கோடம்பாக்கத்திலும், 167 நபர்கள் ராயபுரத்திலும், 133 நபர்கள் தேனாம்பேட்டையிலும் பாதிப்படைந்துள்ளனர்.
அதன்படி,
ராயபுரம் - 6148 பேர்
திரு.வி.க. நகர் - 3440 பேர்
வளசரவாக்கம் - 1667 பேர்
தண்டையார்பேட்டை - 4963 பேர்
தேனாம்பேட்டை - 4785 பேர்
அம்பத்தூர் - 1440 பேர்