காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு , ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம் அடுத்த சந்த வேலூர் ஆகிய இடங்களில் சுகாதாரத் துறை சார்பாக covid19 மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை காஞ்சிபுரம் மாவட்ட கரோனா சிறப்பு கண்காணிப்பாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் பணியில் ஈடுபட்ட சுகாதார செவிலியர்களிடம் இங்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், துணை ஆட்சியர் சரவணன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ரமணி, ஸ்ரீபெரும்புதூர் சுகாதாரத் துறை அலுவலர் சீனிவாசன், ஸ்ரீபெரும்புதூர் செயல் அலுவலர் தன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.