கரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துதவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பொள்ளாச்சி கோவை ரோட்டில் வசித்துவருகின்றனர்.
இவர்கள் தினந்தோறும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊசி, பாசி போன்ற பொருள்களை விற்று பிழைப்பு நடத்திவந்தனர்.
ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகளால் இவர்கள் மற்ற பகுதிகளில் சென்று பொருள்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தங்களுக்கு உதவுமாறு தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு, எண்ணெய் போன்ற நிவாரணப் பொருள்களை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கேஜி சிவக்குமார் பொதுமக்களை சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இதையும் படிங்க: பழங்குடியின கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் ஆட்சியர்!