சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பார் அசோசியேஷன் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பரவல் காரணமான கடந்த 90 நாள்களாக எந்த வழக்குகளும் நேரடியாக விசாரிக்கப்படுவது இல்லை. ஜூன் முதல் வாரம் மட்டும் நேரடியாக விசாரிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்று அச்சத்தால் நீதிமன்றத்தில் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படவில்லை.
வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக வழக்குகள் விசாரிக்கப்படுகையில், பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் எழுகின்றன. வழக்குரைஞர்களால் வாதங்களையும் தெளிவாக முன்வைக்க முடிவதில்லை. ஆகவே, நேரடி விசாரணைக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகளின் அறைகளில் இருந்து விசாரிக்க, வழக்குரைஞர்கள் நீதிமன்ற அறைகளில் இருந்து வாதிடும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கலாம்.