தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கு - தற்போதைய நிலையே தொடர உத்தரவு - நிலத்தை கையகப்படுத்தும் பணி

மதுரை: தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கில், மனுதாரரின் நிலத்தை கையகப்படுத்த தற்போதைய நிலையே தொடர உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்த தடை கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவு
தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்த தடை கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவு

By

Published : Jun 2, 2020, 8:27 PM IST

மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரைச் சேர்ந்த அம்பிகாபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"மதுரை மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை வாடிப்பட்டி, தாதம்பட்டியிலிருந்து சிட்டம்பட்டி வரை சுற்றுச்சாலை அமைக்க 2018 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது.

முல்லைப் பெரியாறு இருபோக பாசன நிலம், கால்வாய்கள், நீர்நிலைகள், வனப்பகுதி வழியாக சாலை அமைக்க உள்ளனர். இதனால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவமழைத் தொடங்க உள்ள இந்நேரத்தில் விவசாயம் முழு வீச்சில் நடைபெறும்.

இந்நிலையில் அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். எனவே, புதிய தேசிய நெடுஞ்சாலை (தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை) அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும்", எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் அமர்வு, மனுதாரரின் நிலத்தை கையகப்படுத்த தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details