வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே லட்சுமி அம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி சந்திரா(40). இவர்களுக்கு மலையடிவாரம் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 19) விவசாய நிலத்தில் மேய்ச்சலில் இருந்த பசுமாட்டை வீட்டிற்கு ஓட்டி செல்ல மாட்டின் கயிற்றை அவிழ்க்க முயன்றுள்ளார்.
நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் கையில் இரண்டு விரல் துண்டிப்பு! - Country bomb explodes and amputates two fingers of female hand
வேலூர்: விவசாய நிலத்தில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தில் பெண் ஒருவர், கையில் இரண்டு விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார்.
அப்போது அங்கு இருந்த பிளாஸ்டிக் டப்பாவை சந்திரா கையில் எடுத்த போது அதிலிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதரியது. அதில், சந்திராவின் இடது கையில் இரண்டு விரல் துண்டிக்கப்பட்டுள்ளது. சந்திராவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இப்பகுதியில் நிலக்கடலை பயிரை நாசம் செய்யும் வனவிலங்குகளுக்கு வைக்குப்பட்டிருக்கும் நாட்டு வெடிகுண்டு என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினரும் மேல்பட்டி காவல் துறையினரும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.