திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பருத்தியை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரசு சார்பில் கிலோ ஒன்றுக்கு 52 முதல் 55 ரூபாய் வரை பருத்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து இந்திய பருத்திக் கழகம் முழுமையாக பருத்தியை கொள்முதல் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் போது கிலோ 30 ரூபாய்க்கு மட்டுமே விலை கிடைப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.