2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி! - Voter list corrections
சேலம்: மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, அல்லது திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்ய, படிவங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் வயது சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் இவைகளில் ஏதேனும் ஒன்றின் நகல், மற்றும் இருப்பிட சான்றுக்கு, ஆதார் அட்டை, பேன் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு இதில் ஏதேனும் ஒன்றின் நகல் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.