தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
பெங்களூரு பகுதியில் இருந்து தருமபுரி வந்தவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி கடைவீதி பகுதியைச் சேர்ந்த ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பிய நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மூன்று தினங்களுக்குப் பிறகு நிதி நிறுவன ஊழியர் குடும்பத்தில் உள்ள அவரது மனைவி, குழந்தை மற்றும் அவரது மாமனார் உள்ளிட்ட மூவருக்கு தோற்று உறுதியாகியுள்ளது.