சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! - சென்னை கரோனா பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துவிட்டது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது
By
Published : Jun 22, 2020, 1:43 PM IST
தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் கரோனா வைரஸ் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று மட்டும் எப்போதும் இல்லாத அளவில் 1,493 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 243 பேரும், தேனாம்பேட்டையில் 182 பேரும், கோடம்பாக்கதில் 156 பேரும், தண்டையார்பேட்டையில் 153 பேரும், ராயபுரத்தில் 140 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பரவலை தடுக்க வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியலை பார்க்கலாம்.
வ.எண்
பகுதிகள்
பாதிப்பு
01
ராயபுரம்
6288
02
தண்டையார்பேட்டை
5116
03
தேனாம்பேட்டை
4967
04
கோடம்பாக்கம்
4485
05
அண்ணா நகர்
4385
06
திரு.வி.க. நகர்
3532
07
அடையாறு
2435
08
வளசரவாக்கம்
1719
09
திருவொற்றியூர்
1545
10
அம்பத்தூர்
1519
11
மாதவரம்
1135
12
ஆலந்தூர்
880
13
பெருங்குடி
854
14
சோழிங்கநல்லூர்
775
15
மணலி
581
இவ்வாறு சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் 41 ஆயிரத்து 172 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 22 ஆயிரத்து 887 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 601 ஆக உள்ளது.