தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி புதுப்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர், மீண்டும் சொந்த ஊரான பாப்பிரெட்டிப்பட்டிக்கு திரும்பினார்.
தருமபுரியில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று - தருமபுரியில் கரோனா பாதிப்பு 24 ஆக உயர்வு
தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Coronal infection of a woman in Dharmapuri
சுகாதாரப் பணியாளர்கள் அந்த பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றவர்களில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.