தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தருமபுரியில் வேகமெடுக்கும் கரோனா தொற்று: பொதுமக்கள் பீதி! - Dharmapuri Corona Updates

தருமபுரி: கிராமப் பகுதிகளில்‌ கடந்த மூன்று நாள்களாக கரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Corona Viruse Higliy Affected In Dharmapuri
Corona Viruse Higliy Affected In Dharmapuri

By

Published : Jul 19, 2020, 10:35 PM IST

தருமபுரி மாவட்டத்தில், கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதனிடையே, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து தருமபுரி திரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வீடுகளுக்கு திரும்புவது அதிகரித்துள்ளது.

முன்னதாக பென்னாகரம் பகுதியில் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் வீடுகளுக்கு வந்தவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, நாகரசம்பட்டி, புதன அள்ளி ஆகிய கிராமங்களில் கடந்த மூன்று நாள்களில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 446 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 252 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கரோனா தொற்று கிராமங்களில் வேகமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தால் வீட்டிலேயே படுத்திருக்கும் கரோனா நோயாளி!

ABOUT THE AUTHOR

...view details