கரோனா பரவல்: சென்னையில் இரட்டிப்புக் காலம் 25.4 நாள்கள் - chennai corona updates
சென்னை: சென்னையில் கரோனா வைரஸ் இரட்டிப்புக் காலம் 25.4 நாளாக உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கரோனா பரவல்: சென்னையில் இரட்டிப்பு காலம் 25.4 நாள்கள்
By
Published : Jul 9, 2020, 2:52 AM IST
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுரக் குடிநீர் வழங்குவது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் குணமடைந்தவரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டுவருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் சென்னையில் இரட்டிப்புக் காலம் 25.4 நாள்கள் ஆக உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இரட்டிப்பு காலம் என்பது நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அது எவ்வளவு நாள்களில் இரட்டிப்பு ஆகிறது என்பதுதான் (எடுத்துக்காட்டுக்கு ஒரு மண்டலத்தில் 100 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அது இரட்டிப்பாக 200 நபர்கள் எவ்வளவு நாள்களில் பாதிக்கப்படுகின்றனர் என்பதே).
அதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இரட்டிப்பு கால அளவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.