தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை - அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர்: நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடைபெற்றது.

துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை
துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை

By

Published : Jul 1, 2020, 10:33 AM IST

அரியலூர் நகராட்சியில் 187 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நகரில் 93 தெருக்களிலும் உள்ள குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் இவர்கள் ஓய்வின்றி உழைத்து வருவதால் இவர்களுக்கு இன்று கோவிட்-19 பரிசோதனை அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது நகராட்சியின் ஆணையர் துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பரிசோதனையை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஹேமச்சந்காந்தி தொடங்கிவைத்தார். இதற்கான முடிவுகள் இன்னும் இரு தினங்களில் தெரியவரும் என தெரிவித்தனர். ஒரே நாளில் நகராட்சியில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குற்றப் பின்னணி கொண்ட தூத்துக்குடி காவல் ஆய்வாளர்: அம்பலமான பகீர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details