திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 586ஆக இருந்தது. இன்று புதிதாக 50 பேருக்கு நோய் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலையில் ஒரே நாளில் அரைசதம் அடித்த கரோனா! - திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்
திருவண்ணாமலை: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 636ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து வந்த 16 பேர், காஞ்சிபுரத்திலிருந்து வந்த நான்கு பேர், மும்பையிலிருந்து வந்த ஒருவர், நோயாளியுடன் தொடர்பிலிருந்த 15 பேர் உள்ளிட்ட 50 பேருக்கு கரோனா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருபுறம் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 393 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது.