தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 20, 2020, 1:11 AM IST

ETV Bharat / briefs

தஞ்சாவூரில் கரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம்

தஞ்சாவூர்: கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளர் பிரதீப் யாதவ் ஆய்வுக்கூட்டத்தில் கேட்டறிந்தார்.

Corona prevention study meeting was held in Thanjavur
Corona prevention study meeting was held in Thanjavur

தஞ்சாவூர் மாவட்ட கரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலர் ப்ரதீப் யாதவ் தலைமையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தற்போது மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்காக மாதிரி எடுக்கும் இடங்கள், வெளியூர்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், கும்பகோணம், தாராசுரம் மார்க்கெட் போன்ற கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள இடங்களில் தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்துதல், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்தும் மையங்களை தயார்படுத்துதல் ஆகியவை குறித்து கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்திடுமாறும், வெளியூர்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து பரிசோதனை செய்யாமல் இருப்பவர்களை வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணியினை தீவிரப்படுத்துமாறும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

முழு கவச உடை, முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றின் கையிருப்பு குறித்து கேட்டறிந்த கண்காணிப்பு அலுவலர், முகக்கவசம் அணியாதவர்கள், தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள், கிருமி நாசினி மற்றும் கை கழுவும் அமைப்பு ஏற்படுத்தாத வணிக நிறுவனங்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுத்திடுமாறு அறிவுறுத்தினார்.

கரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி மாவட்டத்தில் தொற்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றுவருவது குறித்து கண்காணிப்பு அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் எடுத்துக் கூறினார். மேலும், பருவ மழைக்காலம் வரவுள்ளதால், அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால்களை தயார் செய்திடுமாறும், டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திடுமாறும் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி கோரிகுளம் பகுதியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர், பொதுமக்களுக்கு செய்யப்படும் பரிசோதனை முறை குறித்து கேட்டறிந்தார். காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகளவில் நடத்திடுமாறு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details