தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 27 பேருக்கு கரோனா! - திருவள்ளூர் கரோனா செய்திகள்

திருவள்ளூர்: ஊராட்சி மன்ற தலைவரின் அண்ணன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

27 Corona Positive Cases In Thiruvallur
27 Corona Positive Cases In Thiruvallur

By

Published : Jul 28, 2020, 10:12 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பூவளம்பெடு, ஊராட்சி மன்றத் தலைவரும் திமுக ஒன்றிய இணைச் செயலாளர் வெங்கடாசலபதி என்பவரின் அண்ணன் மாமல்லபுரத்தில் வசித்து வந்ததார். இதனிடையே, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவரின் உடலை சொந்த கிராமமான பூவளம்பெடு கிராமத்தில் அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது, அரசு அறிவித்த நான்கு மணிநேரத்தை கருத்தில் கொள்ளாமல் சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக அடக்கம் செய்யாமல் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உடலை தாமதமாக அடக்கம் செய்ததால், இறுதிச் சடங்கில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தனது கணவரின் அண்ணன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முன்னாள் சேர்மன் புனித வெள்ளி வெங்கடாஜபதி அவர்களுடைய உறவினர்களுடன் கட்டி தழுவி அழுததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பலருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details