தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஊழியர்களுக்கு கரோனா; அம்மா உணவகம் மூடல்! - amma mess

விழுப்புரம்: திண்டிவனத்தில் அம்மா உணவக ஊழியர்கள் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணி மேற்கொள்ள ஏதுவாக உணவகம் தற்காலிமாக  மூடப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு கரோனா! அம்மா உணவகம் மூடல்
ஊழியர்களுக்கு கரோனா! அம்மா உணவகம் மூடல்

By

Published : Jul 16, 2020, 6:15 PM IST

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிகக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்ற ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள அம்மா உணவகத்தில் தொடர்ந்து மூன்று வேளையும் இலவசமாக உணவளிக்க அம்மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தனது சொந்த நிதியை கடந்த மார்ச் மாதம் முதல் மாதந்தோறும் வழங்கிவருகிறார்.

இதன் காரணமாக அம்மா உணவகத்தில் தொடர்ச்சியாக ஏழை எளியோர், ஆதரவற்றவர், முதியோர் உள்ளிட்டோர் கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக இலவசமாக உணவருந்தி வந்தனர். இந்நிலையில், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் உள்பட நான்கு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள், தற்காலிமாக அந்த உணவகத்தை மூடினர். இச்சம்பவம் திண்டிவனம் நகரத்தில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details