கரோனா தொற்று நாடு முழுவதும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்த நிலையில், தற்போது கிடுகிடுவென உயர்ந்து கடந்த வாரம் 2 ஆயிரத்து 100-ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில், இன்று மட்டும் 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 928 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.