திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் செரியன் ஹாட் பவுண்டேஷன் மருத்துவமனையில் 120 சிறப்பு படுக்கை வசதி கொண்ட கரோனா வார்டுகள் உள்ளது.
இங்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் கரோனாவால் பாதிக்கப்பட்ட 57 ஆண் நோயாளிகளும், 19 அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு
குடிநீர், கழிவறை, இருக்கை வசதிகள் குடிநீர் வசதி, உணவு, மருத்துவ வசதி, பெண்களுக்கு தனி வார்டு போன்ற வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.
கரோனா நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டம்! இதனைக் கண்டித்தும், தங்களை வீடுகளுக்கு அனுப்புமாறும் கரோனா நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், நோயாளிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
கரோனா நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டம்!