புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து நேற்று தலைமறைவானார்.
அவர் அளித்த முகவரியைக் கொண்டு காவல் துறையினர், சுகாதாரத் துறை ஊழியர்கள் அங்கு சென்று விசாரித்தபோது அவர் கொடுத்த முகவரி பொய்யானது எனத் தெரியவந்தது.
தலைமறைவான அவரால் நோய் பரவும் ஆபத்து உள்ளதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தாசில்தார் குமரன் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மதுரை ஆவின் முறைகேடு: சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர் சஸ்பெண்ட்