விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள தென்கோடிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (43). இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 25ஆம் தேதி விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று மருத்துவமனையில் இருந்து திடீரென காணாமல் போனார். இதையடுத்து காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், அந்த நபர் தென்கோடிபாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிளியனூர் காவல் துறையினர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.