தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா பீதி: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை - Suicide by Corona Panic

சேலம்: மகளுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கரோனா பீதி: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை
கரோனா பீதி: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை

By

Published : Jul 13, 2020, 3:02 PM IST

சேலம் அன்னதானப்பட்டி பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த 72 வயது சாந்தா என்ற மூதாட்டியின் மகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கடந்த 9 ஆம் தேதி முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். சாந்தாவின் மகள் சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதன் காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சாந்தாவிற்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று(ஜூலை 13) அதிகாலை வீட்டிலேயே சாந்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்த உறவினர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரோனா அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா?என்பது குறித்து அன்னதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த சாந்தாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details