திருவாரூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேவருகிறது. குறிப்பாக, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்குத் தொடர்ச்சியாக தொற்று உறுதிசெய்யப்பட்டுவருவதால், இவ்வாறு தொற்று அதிகம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
4 வணிகர்களுக்கு கரோனா தொற்று: 5 நாள்கள் கடைகள் அடைப்பு - shops closed
திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் நான்கு வணிகர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி முழுவதும் ஐந்து நாள்கள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நன்னிலம் அருகே உள்ள பேரளம் கடைத்தெருவில் நான்கு வணிகர்களுக்கு சென்னையிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால், கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து வணிகர்கள் சங்கத்தினர் ஒன்று சேர்ந்து ஐந்து நாள்கள் அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என அறிவித்தனர். அதன்படி, பேரளம் கடைத் தெரு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.