தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. பலர் அங்கிருந்து மற்ற மண்டலங்களுக்குச் செல்வதால் தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவும் அச்சம் நிலவிவருகிறது.
பல் மருத்துவரின் 3 வயது குழந்தைக்குக் கரோனா! - Corporation order
ஈரோடு: சம்பத் நகரில் பல் மருத்துவரின் மூன்று வயது குழந்தைக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பல் மருத்துவரின் மூன்று வயது குழந்தைக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையைச் சிகிச்சைக்காக பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் மேலும், பெற்றோர்களுக்குக் கரோனா பரவியிருக்க வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி அவர்களும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள், பழமுதிர் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வியாபார நிறுவனங்களையும் உடனடியாக மூட மாநகராட்சித் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.