வேலூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 18) மட்டும் புதியதாக மேலும் 144 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது குடியாத்தம் கிராமிய காவல் நிலைய காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் நகர காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 காவலர்களுக்கு இன்று (ஜூலை 18) கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், இரண்டு நாட்களுக்குத் தற்காலிகமாக அந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
4 காவலர்களுடன் சேர்த்து 144 பேருக்குக் கரோனா!
வேலூர்: குடியாத்தத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், 3 காவலர்கள் உட்பட புதியதாக 144 பேருக்கு இன்று (ஜூலை 18) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Corona infection for 144 people
மேலும் காவல் நிலையப் பணிகள் அனைத்தும் கட்டடத்திற்கு வெளி வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,867 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் நேற்று (ஜூலை 17) மட்டும் சுமார் 200 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் இம்மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,313 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.