விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து காவலராகப் பணிபுரிந்துவரும் கணேஷ்குமார் (38) என்பவருக்கு தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் போக்குவரத்து காவலருக்கு கரோனா தொற்று உறுதி - விருதுநகர் மாவட்ட செய்தி
விருதுநகர்: போக்குவரத்து காவலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டதையடுத்து, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
![விருதுநகர் போக்குவரத்து காவலருக்கு கரோனா தொற்று உறுதி Corona infection confirmed to Virudhunagar traffic policeman](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:36-tn-vnr-04-corona-attack-vis-script-7204885-18062020125724-1806f-1592465244-627.jpg)
Corona infection confirmed to Virudhunagar traffic policeman
போக்குவரத்துக் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பணிபுரிந்த விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அவருடன் பணிபுரிந்த போக்குவரத்துக் காவலர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.