கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக கோவை கொடிசியாவில் 670 படுக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) மேலும் 100 படுக்கைகளை சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
கரோனா தொற்று: கொடிசியாவில் மேலும் 100 படுக்கைகளுக்கு ஏற்பாடு - கோவை ஈ எஸ் ஐ மருத்துவமனை
கோவை: கரோனா தொற்றுக்காக கொடிசியாவில் மேலும் 100 படுக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று: கொடிசியாவில் மேலும் 100 படுக்கைகள் அமைப்பு
இந்த 100 படுக்கைகள் வடவள்ளி பகுதியில் உள்ள இந்திய மருத்துவர்கள் கழகம் சார்பில் வழங்கப்படுகின்றன. அதே சமயம் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் காப்பீட்டு அட்டையைக்கொண்டு சிகிச்சை பெற தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இன்னும் ஓரிரு நாள்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.