தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் காவல் நிலைய வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் மங்களம் ஊராட்சி சார்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.