தமிழ்நாட்டில் மேலும் 1,162 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக உயர்வடைந்துள்ளது.
புதிதாக 967 பேருக்கு கரோனா - நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை - புதிதாக 967 பேருக்கு கொரோனா
சென்னையில் இன்று 967 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னையில் இன்று 967 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,170 ஆக அதிகரித்தது. இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழந்த நிலையில், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் நாளை சென்னையில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், ஐஏஎஸ் அலுவலர்கள், ஐபிஎஸ் அலுவலர்கள், துறைச் செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.