தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தலைமை காவலர் உள்பட 83 பேருக்கு கரோனா - Corona for 83 people

கன்னியாகுமரி: ஒரே நாளில் நாகர்கோவில் நீதிமன்ற பெண் ஊழியர், காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய தலைமை காவலர் உள்பட 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய தலைமை காவலர் உட்பட 83 பேருக்கு கரோனா
காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய தலைமை காவலர் உட்பட 83 பேருக்கு கரோனா

By

Published : Jul 8, 2020, 11:46 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் இரண்டாவது நீதிமன்றத்தில் பணியாற்றும் 24 வயது பெண் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நீதி மன்ற அலுவலகம் மூடப்பட்டது. இந்தப் பெண் ஊழியருடன் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு சளி மாதிரிகள் எடுத்து மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

இதேபோல குமரி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த 50 வயது தலைமை காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

காவல் கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டு அவருடன் பணியாற்றிய சக காவலர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது.

இதேப் போன்று குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பட்டியலின மக்கள் வீடுகள் இடிந்து தரைமட்டம்!

ABOUT THE AUTHOR

...view details