தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் பொது போக்குவரத்துக்கும் ஜூன் 30ஆம் தேதி வரை அரசு தடை விதித்துள்ளது.
கரோனா பாதிப்பு: திருவாரூரில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு - திருவாரூரில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு
திருவாரூர்: கரோனா தொற்று அதிகரிப்பதால் திருவாரூர் மாவட்ட எல்லையில் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Corona Disease Intensive Monitoring of Health Services in Thiruvarur
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, எந்த மாவட்ட அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் வந்தாலும், திருவாரூர் மாவட்ட எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கார்களில் செல்வோர் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
TAGGED:
திருவாரூர் கரோனா பாதிப்பு