தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை - tamilnadu corona affected report

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 700ஆக உயர்ந்துள்ளது.

கரோனா: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
கரோனா: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

By

Published : Jul 8, 2020, 7:30 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன்படி, இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் மூன்றாயிரத்து 756 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 261 பேருக்கு இன்று தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 700ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில், இதுவரை 74 ஆயிரத்து 167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், இன்று மூன்றாயிரத்து 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :

அரியலூர் - 487

செங்கல்பட்டு - 7,215

சென்னை - 72,500

கோவை - 967

கடலூர் - 1,413

தர்மபுரி - 156

திண்டுக்கல் - 73

ஈரோடு - 296

கள்ளக்குறிச்சி - 1,285

காஞ்சிபுரம் - 2,970

கன்னியாகுமரி - 872

கரூர் - 182

கிருஷ்ணகிரி - 21

மதுரை - 5,057

நாகபட்டினம் - 325

நாமக்கல் - 130

நீலகிரி - 160

பெரம்பலூர் - 173

புதுக்கோட்டை - 449

ராமநாதபுரம் - 1,544

ராணிப்பேட்டை - 1,325

சேலம் - 1,409

சிவகங்கை - 611

தென்காசி - 558

தஞ்சாவூர் - 544

தேனி - 1,297

திருப்பத்தூர் - 322

திருவள்ளூர் - 5,507

திருவண்ணாமலை - 2,688

திருவாரூர் - 614

தூத்துக்குடி - 1,558

திருநெல்வேலி - 1,300

திருப்பூர் - 262

திருச்சி - 1,077

வேலூர் - 2,258

விழுப்புரம்- 1,339

விருதுநகர் - 1,298

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 476

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 379

ரயில் மூலம் வந்தவர்கள்: 421

ABOUT THE AUTHOR

...view details