சென்னையில் கரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. சில மண்டலங்களில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளித்தல், மக்களுக்கு முகக்கவசம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கரோனா பாதிப்பு: சென்னையில் ஆயிரத்தை நெருங்கிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்! - கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
சென்னை: கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 866இல் இருந்து 976 ஆக உயர்ந்துள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயிரத்தை நெருங்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
அதன் ஒரு பகுதியாக, ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து வீடுகளில் தொற்று இருந்தால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது. அதன்படி, சென்னையில் நேற்று(ஏப்.23) 866 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது 976 ஆக உயர்ந்துள்ளது.
727 தெருக்களில் ஆறுக்கும் மேற்பட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 249 தெருக்களில் பத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.